என்னை பாதித்த ஒரு நிகழ்வு

அம்மா: சார்..  என் பையன் தான் சார்.. இன்னைக்கு காலைல பால் வாங்குறேன்னு சொல்லிட்டு சைக்கிள்ல போயிருந்தான்...


இப்படி ஆகும்னு நெனச்சே பாக்கல சார்...


எங்க வீட்டுக்காரரும் அப்பீஸ்க்கு போய்ட்டாரு..

வீட்ல நானும் பொன்னும்தான் சார் இருந்தோம்..


பொண்ணுக்கு ஆன்லைன் கிளாஸ்ங்கிரனால அது கிளாஸ் பாத்துட்டு இருந்துச்சு.


நான் பையன தான் போய் பால் பாக்கெட் வாங்க சொன்னேன்..



அவன் போய்.. ரொம்ப நேரம் ஆகிருச்சு சார்.. ஒரு மண்ணெரம் ஆகிருச்சு.. என்ன பண்றதுனு தெரில..  நானும்.. பக்கத்து வீட்டுக்காரங்க.. கடைக்கே போய்லாம் கேட்டுப்பாத்தேன்..   பையன் வரலேன்னு தான் சார் சொன்னாங்க..  இந்த கொற்ற மழைலயும் நான் போய் பாத்துட்டு தான் சார் இருந்தேன்..


அப்போ தான் சார் பாத்தேன்.. போற வழில பிரிட்ஜ்ல தண்ணி அதிகமே போய்ட்டு இருந்துச்சு சார்.. அப்போ தான் சார் பாத்தேன்.. முன்னாடியே தெரிஞ்சுருந்தா பையன வெளிலயே அனுப்பிச்சிருக்க மாட்டேன்.. சார்..


சார் நீங்க தான் எப்படிய்ச்சு கண்டுபிடிச்சு குடுக்கணும்..


போலீஸ்: மா கண்டிப்பா கண்டுபுடிச்சரலாம் மா.. நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க.. அதுக்கு தான நாங்க இருக்கோம்..


அம்மா phone to அப்பா:

அம்மா: தம்பி.. பால் பாக்கெட் வாங்குறேன்னு போயிருந்தான்.. இனியும் வரல.. அவன காணல..   காலைல போயிருந்தான்.. மழை வேற பெஞ்சிட்டு இருச்சா.. நான் வந்து வெளில போக முடியாதுனு.. தம்பிய விட்டு சைக்கிள்ல போய் வாங்க சொன்னன்.. தம்பி போய் ஒருமந்நேரம் கிட்ட ஆகிருச்சு.. அப்பறோம் கடைல போய் கேட்டு பாத்தேன்.. தம்பி வரலேமு தான் சொன்னாங்க..


எனக்கென்னா.. போற வழில.. தண்ணி அதிகமா இருந்திருக்கு.. அதுனால எங்கயாச்சு அடிபட்டு.. விழுந்திருப்பானோனு சந்தேகமா இருக்கு.. நீங்க கொஞ்சம் சீக்கிரமா வீட்டுக்கு வாங்க..


தங்கச்சி: அம்மா.. அண்ணன் எப்போ மா வீட்டுக்கு வருவான்..


அம்மா: மா நீ அமைதியா இரு மா.. நீ சும்மா இரு.. நீ எதுக்கு பேசிட்டு இருக்க.. நீ அமைதியா போய் உன் வேலைய பாரு.. அண்ணன் லாம் வந்திருவான்.. வீட்டுக்கு..


அம்மா phone to போளிஸ்:

சார்.. பையன் கெடச்சுட்டான்னா சார்.. சீக்கிரமா பாத்து சொல்லுங்க சார்.. எங்களுக்கு பாத்தட்டமா இருக்கு..


போலீஸ்: மா.. நாங்க பொறுமையா தான் மா பாக்க முடியும்.. உங்க அவசரதுக்கு லாம் எங்களால வேல செய்ய முடியாது.. இங்க நிலவரம் அப்படி.. மழவேற பேயுது..


நாங்க தேடி கண்டுபுடிச்சிர்வோம்.. மா.. ஒன்னும் கவலை படாதீங்க.. நாங்களே inform பண்றோம்..


போலீஸ் to மீடியா:

ஹெலோ மீடியா. இந்த மாறி ஒரு நியூஸ் கெடடச்சிருக்கு ங்க.. ஒரு பயண காணோம்.. அவன் இந்த வழில தான் போயிருப்பான்னு சொல்ராங்க.. தண்ணி force அதிகமா இருக்கு.. Maybe.. பையன் தண்ணில அடிச்சுட்டு போயிருந்திருக்கலாம்..


News: தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட இளம் வயது வாலிபரைத் தேடும் பணியில் தீவிரம்.


Youtube comment:

இனி எவளோ நாள் தான் இது திரும்ப திரும்ப நடக்க போது.. இங்க எதுமே மாறாது..


தம்பி:

காலை ஒன்பது மணி. Mask அணிந்தவாறு cycle'யில் புறப்படுகிறான்.


அம்மா pal packet வாங்க சொல்லிருக்காங்க.. காசு.. நூறு ரூபா தந்துருக்காங்க.. சரி சில்லறை மீதிய correct ah பாத்து வாங்கிட்டு வந்தரனும்..

மழைவேற இப்படி பெயது.. என்னைக்குதான் நிக்கப்போகுதோ..

எப்டியோ நமக்கு ஆன்லைன் கிளாஸ்.. Leave தான்.. இந்த வருஷமும் இப்டியே போயிரும்.. நிம்மதியா இருக்கலாம்..


மழை அதிகமாக ஆரம்பிக்கிறது.. இவன்.. தொப்பி, கொடை.. எதுவும் கொண்டு செல்லவில்லை.. அதனால் அவசரம் அவசரமாக போகிறான்...


மழைத்தண்ணி தேங்கி இருந்த இடத்தில்.. இவன் வேகமாக சென்றாதல்.. தண்ணீரின் வீரியம் தெரியாமல்.. தண்ணிருக்குள் இழுக்கப்படுகிறான்..


எவ்ளோவவு.. முயன்றும் அவனால் வேறு எங்கும் நகர முடியவில்லை.. இதைப்பார்த்த கடைக்காரர்..


தம்பி.. தம்பி.. எங்க பா போற.. காப்பாத்த வரேன் பா.. இரு பா.. என்கிறார்.


அவர் வருவதற்குள் பிரிட்ஜ் சுரங்கத்திற்குள் அடிதுச்செல்லப்படுகிறான்..


நிறய வழிகள் இருக்கு.. பிரிட்ஜ் விட்டு வெளிய வர.. இப்போதைக்கு.. தடை செய்யப்பட்ட பகுதி.. ஆனால் கடைக்கு செல்லும் வலி.. அந்த பிரிட்ஜ் ஒட்டி இருப்பதால்.. அங்கு சென்றான்..


அம்மாக்கு.. தம்பி.. நீரில் அடித்து செல்லப்பட்டது தெரியாது.. அங்க இருந்தவங்க பாத்திருக்காங்க.. ஆனா அம்மா இருந்த நெலமைல.. சொல்ல வேணாம்னு இருக்காங்க..


ஒரு வேலை அந்தக பையன்.. உயிரோடு.. இருபதற்கும் வாய்ப்புண்டு.. ஏனால் போலீஸ் உட்பட.. யாருக்கும்.. தம்பி இருக்கும் இடம்.. அரியப்படவில்லை..


அம்மா: ஏங்க.. வாங்க.. பாருங்க தம்பி pal packet வாங்கிருந்தன்.. இப்டி ஆயிருச்சு ங்க.. என்ன பண்றதுனே தெரில..


அப்பா : எம்மா.. உன்ன யாரு அவன pal packet லாம் வாங்க அனுப்ப சொன்னது.. ம்ம்.. இந்த மழ பேயுது...


அம்மா: அய்யா நீங்க என் இப்படியெல்லாம் பேசுறீங்க.. மொதல்ல போலீஸ் ஸ்டேஷன்ல போய் பாப்போம்.. பையனுக்கு என்னாச்சுனு பாப்போம்.. அதுக்காப்றம்.. நாம சண்ட போடறமோ என்னவே அப்பறோம் பாத்துக்கலாம்..


தங்கச்சிய வீட்டுல விட்டுட்டு.. போலீஸ் ஸ்டேஷன் போகிறார்கள்.


அப்பா: சார் என் பையனுக்கு என்ன ஆச்சு சார்.


போலீஸ்: சார் உங்க பையன்.. அந்த பிரிட்ஜ் கீழ அந்த வழிலதான் போயிருக்கான்.. போகும்போது.. தண்ணியோட force ரொம்ப அதிகமா இருந்தனால.. தம்பி வந்து speed தாக்குப்பிடிக்க முடியாம.. இருந்திருக்கான்..


அந்த பிரிட்ஜ்க்கு நாலு வழி இருக்கு.. நாலு வழியிலுமே தண்ணி தேங்கி இருந்திருக்கு..

Underground ங்கிற நால.. மழைங்கிற நால..


அத யாரும் maintain உம் பண்றதில்ல சார்..

தண்ணி தேங்கிஇருந்தனால.. ஆழமும் அதிகமா இருக்கு.. கண்டுபுடிக்குறது.. கஷ்டம் தான் சார்.. நாங்க முடிஞ்சவர தேடி பாக்குறோம்..


சொல்ல கஷ்டமாதான் சார் இருக்கு..


தம்பி எவளோ height இருப்பான் சார்.?


அப்பா: அவன் சின்ன பையன் தான் சார்.. அஞ்சாவதுதான் சார் படிக்கிறான்.. அஞ்சவது படிக்குற பைய்யன் எவ்வளவு height சார் இருக்கும்..


போலீஸ்: சார் பரவால்ல சார்.. நீங்க சொல்ல்லுங்க சார்.. எதுக்கும் நாங்க கண்டுபுடிக்க உதவும் சார்..


அப்பா: அவன் ஒரு 50 cm இருப்பான் சார்.. Sorry சார்.. எனக்கு சரியா தெரில.. இவ்ளோ height இருப்பான் சார்..

என்று.. ஒன்றை சொல்கிறார்.


போலீஸ்: சார் இந்த அளவுல இருந்தா.. அவனால எங்கயாச்சு காத்து இருக்க இடமா.. பாத்து.. அவன அவனே காப்பாத்திக்க முடியும்னு நெனைக்றோம் சார்..

நாங்க தேடி பாக்கறோம்.. சார்..


மாலை ஆருமணி.

இருட்ட ஆரம்பித்தது

தம்பி தான் வந்த சைக்கிள்லில் மீது நின்று.. காற்று உள்ள பகுதியில்.. நின்று கொண்டு ஒருந்தான்.. காப்பாற்ற ஒருவர் வருவார் என்று எதிர்பார்த்துக்கொண்டு இருந்தான்..


போலீஸ்:

ஒரு ஏழு மணின்வர உயிரோடு தான் இருந்திருக்கான்.. ஆனா அதுக்கு அப்பறோம்.. பெஞ்ச மழைல.. அவன எங்களால காப்பாத்த முடில..


ஏன் எங்களால முன்னடியே போய் காப்பாத்த முடிலேனா.. Workforce people வந்து கம்மியா இருந்த நால.. பிரே service கெல்லாம் கூட.. Inform பணி கேட்டு பாத்துட்டோம்.. ஆளுங்க மத்த வேலைல இடுப்பட்டு இருந்தனால.. இங்க வந்து சரியா பாக்க முடில..


Iam very sorry சார்!


Appa: ஐயோ ஐயோ.. இதெல்லாம் பாக்கமும்னு எனக்கு எழுதி வெச்சுருக்கு.. வருஷத்தோட முதல் திங்கக்கிழமையே இப்டி நடக்கணுமா..


சார் இதெல்லாம் யார் தப்புனு நீங்களே யோசிச்சு பாருங்களேன் சார்..

தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னைங்கிறேக்க.. சென்னைல ஒரு வெள்ளம் வந்தா.. இப்டி உயிர காவு வாநகர.. அப்பறோம்

எதுக்குன்சார் இவளோ பெரிய பிரிட்ஜ் லாம் கட்டணும்..

எதுக்கு சார் இவளோ பெரிய நிறுவனம் லாம் இருக்கனும்..

எந்த ஒரு சின்ன விஷயத்த உங்களால.. Solve பண்ண முடியலனா நாமெல்லாம் எதுக்கு சாரி உயிரோட.. இருக்கனும்..

Government லாம் எதுக்கு சார் இருக்கு..

இதெல்லாம் பத்தி செய்ய மாட்டேங்களா சார்..

ஆட்சி மாட்டுது.. அது மாறுதனு இது மாறுதுனு சொல்றிங்க..

கடைசிவரைக்கும் எங்க நிலைமை இப்டியே தான் சார் இருக்கு..

என்ன நாங்கவந்து ஒரு எழ.. எங்களுக்கு மாச வருமானமே 2000 கு கீழ..

இப்படிப்படா ஆளுங்க வாழ முடியாத நகரமா.. சென்னை மாறிட்டு இருக்கா சார்..

மேல்தட்டு மக்கள் மட்டும் நல்லா வாழ்ந்த பரவால்லையா சார்..

அவங்களுக்கு மட்டும் எல்லா நன்மையையும் வந்து சேந்த மட்டும் பரவால்லையா சார்..

எங்களமாரி அலுங்காளெல்லாம்.. நாங்கல்லாம் என்ன சார் பண்றது..


சார் னா இதை விட மாட்டேன் சார்.. Court ல case லோடுவேன் சார்..


போலீஸ்: சார் உங்க வேதனையை என்னால புரிஞ்சிக்க முடியுது சார்..

நாங்க இதுல மேலும் விசாரணை நடத்திட்டு இருக்கோம்.. Details கெடச்சா inform பண்றோம் சார்.

சார் பையனோட body வந்துருக்கு சார்..


அம்மா: கதறி அழுகிறாள்.

தங்கச்சி: என்ன செய்வதே என்று தெரியாமல் நிற்கிறாள்.

அம்மா: பாரு மா உன் அண்ணன.. இப்டி ஆகிருச்சே மா..

தங்கச்சி: மெதுவாக அலத்துடணங்குகிறாள்.. பின்னர்.. கதறி அழுகிறாள்..


இதுதான் இன்று சென்னையில் வாழுகின்ற எடுத்ஹ்ட்டு மக்களின் வாழ்க்கைநிலை.



Comments

Popular posts from this blog

The Pink Flower

My First Short Story

Why watch Anora.?