Second Short Story in Tamil | Part - I


அகழ்வாராய்ச்சிக்காக தோண்டப்பட்ட பகுதியில் வேலை பரபரப்பாக நடந்துகொண்டிருந்தது. அப்பொழுது ஒரு முதியவர் அந்த மேடும் பள்ளமும்மாய் இருந்த பகுதியில் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார். கையில் பூதக்கண்ணாடி மற்றும் பிரஷ். எந்த பொருளையும் பார்த்தே அதன் பழமையை கனிக்கும் திறன். வரலாறு, அறிவியல், புவியியல், வானவியல் என எல்லாவற்றிலும் ஒரு பார்வை இருந்தது. இவர் தான் சிற்பி. அகழ்வாராய்ச்சி துறையில் மூத்த அராய்ச்சியாளர். அப்போது அவர் கால்களை ஒரு கணமான பொருள் தடுக்கியது. என்ன என்று பார்த்தார். 


மூன்று பழங்கற்களால் செய்த பொம்மைகள். மூன்று பொம்மையிலும் மூன்று முகங்கள். பார்க்க விசித்திரமாக இருந்தது. சிற்பியின் கண்கள் ஆர்வதில் மூழ்கியது.

சிற்பியின் ஆர்வம் புரிந்த சக ஆராய்ச்சியாளர்கள் அதைப்பற்றி கேட்க, அதற்கு சிற்பி அதன் வடிவமைப்பை பார்த்தது இதன் பழமை ஒரு ஆயிரம் ஆண்டு இருக்கும் என கணித்தார்.

அதைப்பற்றி மேலும் ஆராய்ச்சி செய்ய சிலைகளை வீட்டிற்கு கொண்டுவந்தார் சிற்பி. அவருக்கு வீடும் ஆராய்ச்சிக்கூடம்மும் ஒன்றுதான்.

சிற்பியின் வீட்டின்முன் குழந்தைகள் விளையாடும் மூன்றுசக்கர வண்டி. சிற்பியை வரவேற்க வாசலில் காத்திருந்தான் ஐந்து வயதே ஆன அன்பு, சிற்பியின் சிறுவயது நண்பரும் எதிர்த்துவீட்டுக்காரரும் ஆன ரவியின் மகன்.

அன்புடன் அன்பு(இ)டம் பேசியபடி வீட்டிற்குள் நுழைந்தார். 

வேலைக் கலைப்பால் உணவு உண்டு உறங்கச்சென்றார் சிற்பி.

அந்த மூன்று பொம்மைகள் அம்மாவின் கவனத்தை ஈர்த்தது. பார்க்க அழகாய் இருப்பதால் அந்த மூன்று பொம்மைகளை ஷோகேஸில் வைத்தார்.

அடுத்த நாள் காலை ஆறு மணி, அலாரம் அடித்தது... மணி ஆறு முற்பது ஆனது, ரவி அலைபேசியில் கூப்பிட்டார். இருவரும் தினமும் காலையில் நடைப்பயிற்சி செல்வார்கள். தினமும் சிற்பி தான் ரவிக்குமுன் எழுந்து ரவியை எழுப்புவார்.

எப்போதும்போல் ஷோகேஸ் கண்ணாடியில் முகத்தைப்பார்த்த அவர் அந்த மூன்று பொம்மைகளுள் ஒன்று மட்டுமே இருந்ததை கவனித்தார். வேறு இரண்டும் வீட்டின் எதிர் இரு ஷோகேஸில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் (முக்கோண வடிவில்). யார் இப்படி மூன்று இடத்தில் வைப்பார் என்று சந்தேகத்தில் இருந்தார். அம்மா கலைப்பில் உறங்கிக்கொண்டு இருந்தார். சரி பின்னர் பார்க்கலாம் என்று அலட்சியமாக விட்டுவிட்டார்.

சிற்பிக்குப்பின் எழுந்தார் அம்மா. வீட்டில் கரண்ட் இல்லை. பொம்மைகள் இடம் மாறி இருப்பதை பார்த்தார். அவர் தன் மகன்தான் மாற்றி வைத்திருப்பார் என்று நினைத்தார். அந்த சிலைகளை வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் பார்த்தால் நன்றாக இருக்காது எனவும் மூன்றும் ஒன்றாக இருந்தால் அழகாக இருக்கும் என்பதாலும், மூன்றையும் முன்போல் ஒன்றாக வைத்தார்.

மூன்றாவது நாள் இரவு. வீட்டிற்கு வந்த சிற்பிக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. சிற்பியின் அம்மா ஏதோ ஒன்றை யோசித்துக் கொண்டிருந்தார். கண்களில் குழப்பம், பயம். இதுவரை தன் அம்மாவை இப்படிப் பார்த்திராத சிற்பி என்ன ஆனது என்று கேட்டார்.

அதற்கு நடுக்கமான குரலில் பதில் அளித்த அம்மா. அந்த பொம்மை வீட்டிற்கு வந்த மூன்று நாளில் எல்லா நாளும் இடம் மாறி இருந்ததாகவும். தான் ஒவ்வொருநாளும் காலையில் மூன்றையும் ஒன்றாக சேர்த்து வைத்தாலும் பின்னர் மூன்றும் இடம் மாறி இருப்பதாகவும் சொன்னார்.

மற்றும் இந்த இரண்டு நாளில் வீட்டிற்கு வந்து சென்ற விருந்தினர் எல்லோருக்கும் சிறு முதல் பெரிய விபத்து ஏற்பட்டிருப்பதாகச் சொன்னார்.

இதைக்ககேட்ட சிற்பி முதலில் நம்பவில்லை. எனினும் இந்த சிலை தான் இதற்கு காரணம் என்றால் அதை வீட்டிலிருந்து வெளியேற்றுவதாக அம்மாவிடம் சொன்னார்.

அந்த சிலையை நண்பன் ரவியிடம் கொடுத்தார். அடுத்த நாள் ரவி வீட்டிற்கு சென்ற சிற்பி, அதிர்ந்து போனார். தன் அம்மா கூறியதுபோல் மூன்று பொம்மையும் மூன்று இடங்களில் இருந்தது. ரவியிடம் இதை பற்றி கேட்டார். அதற்கு ரவி நிதானமாக அன்பு ஏதாவது மாத்தி வைத்திருப்பான் என்றார்.

சிற்பி அவர் வீட்டில் நடந்தைதைப் பற்றி ஏதும் சொல்லவில்லை.

இரண்டு நாள் கழித்து மதியம், ரவி ஆராய்ச்சியில் இருந்த சிற்பியை சந்தித்தார். ரவி, தன் வீட்டில் இரண்டு நாளாக சில அமானுஷ்யமான சம்பவங்கள் நடப்பதாகவும் அந்த மூன்று பொம்மைகளை ஒன்றாக வைத்தாலும் முக்கோண வடிவில் முறுபடியும் தன்னை தானே இடம் மாற்றிக் கொள்வோதாகவும் கூறினார்.

இதைக்கேட்ட சிற்பி ரவியிடம் அவர் வீட்டில் விருந்தினர் யாராவது வந்தார்களா என்றார். ரவி, உன்னைத் தவிர வேறு யாரும் வரவில்லை என்றார்.

அப்போது சிற்பிக்கு பின் இருந்த ஒரு பெரிய சிலை அவர்மீது விழபோவதை கணித்த ரவி தன் நண்பரை அகற்றி சிற்பியைக் காப்பாற்றினார்.

அடுத்த பாகம்... விரைவில்.

Comments

Popular posts from this blog

The Pink Flower

My First Short Story

Why watch Anora.?