என்னை பாதித்த ஒரு நிகழ்வு
அம்மா: சார்.. என் பையன் தான் சார்.. இன்னைக்கு காலைல பால் வாங்குறேன்னு சொல்லிட்டு சைக்கிள்ல போயிருந்தான்... இப்படி ஆகும்னு நெனச்சே பாக்கல சார்... எங்க வீட்டுக்காரரும் அப்பீஸ்க்கு போய்ட்டாரு.. வீட்ல நானும் பொன்னும்தான் சார் இருந்தோம்.. பொண்ணுக்கு ஆன்லைன் கிளாஸ்ங்கிரனால அது கிளாஸ் பாத்துட்டு இருந்துச்சு. நான் பையன தான் போய் பால் பாக்கெட் வாங்க சொன்னேன்.. அவன் போய்.. ரொம்ப நேரம் ஆகிருச்சு சார்.. ஒரு மண்ணெரம் ஆகிருச்சு.. என்ன பண்றதுனு தெரில.. நானும்.. பக்கத்து வீட்டுக்காரங்க.. கடைக்கே போய்லாம் கேட்டுப்பாத்தேன்.. பையன் வரலேன்னு தான் சார் சொன்னாங்க.. இந்த கொற்ற மழைலயும் நான் போய் பாத்துட்டு தான் சார் இருந்தேன்.. அப்போ தான் சார் பாத்தேன்.. போற வழில பிரிட்ஜ்ல தண்ணி அதிகமே போய்ட்டு இருந்துச்சு சார்.. அப்போ தான் சார் பாத்தேன்.. முன்னாடியே தெரிஞ்சுருந்தா பையன வெளிலயே அனுப்பிச்சிருக்க மாட்டேன்.. சார்.. சார் நீங்க தான் எப்படிய்ச்சு கண்டுபிடிச்சு குடுக்கணும்.. போலீஸ்: மா கண்டிப்பா கண்டுபுடிச்சரலாம் மா.. நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க.. அதுக்கு தான நாங்க இருக்கோம்.. அம்மா ph...